வரலாறும் வள்ளுவமும்
வார்த்தைகளால் மாறிய வரலாறு குடியரசாக விளங்கிய ரோம் நாட்டின் சர்வாதிகாரியாக ஆக விரும்பிய ஜூலியஸ் சீசர், ஐட்ஸ் ஆஃப் மார்ச் (மார்ச் 15) அன்று செனட் சபையிலே படுகொலை செய்யப்பட்டார். ரோமில் உள்ள சீசரின் சிலை (நன்றி: விக்கீபீடியா) சீசரின் பேராசைக்கு முற்றுப்புள்ளி வைத்ததன் மூலம் ரோம் குடியரசு முறைக்கு வரவிருந்த சர்வாதிகார ஆபத்தை நீக்கிவிட்டதால், பொதுமக்கள் தங்களின் கொலைச்செயலுக்கு ஆதரவளிப்பார்கள் என்று கணக்குப் போட்டனர், சீசரைப் படுகொலை செய்த குழுவின் முக்கியத் தலைவர்களான புரூட்டஸூம் கேசியஸூம். பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்த சீசர் சடலத்தின் முன்பு நின்றவாறு அவரின் தோழரான மார்க் ஆண்டனி ஆற்றிய உரை, வரலாற்றின் போக்கையே மாற்றியது. மார்க் ஆண்டனியின் உரை- ஓவியம் (நன்றி: விக்கீபீடியா) ஷேக்ஸ்பியர் எழுதிய "ஜூலியஸ் சீசர்" நாடகத்தில் "Friends, Romans, Countrymen, lend me your ears!" எனத் துவங்கும்- மார்க் ஆண்டனியின் முக்கியத்துவம் வாய்ந்த அவ்வுரை. ஆண்டனியின் பேச்சைக் கேட்ட பொதுமக்களுக்கு சீசரின் மீதான மதிப்பு உயர்ந்தது; அவரைக் கொன்ற செனட்டர...